மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்


மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2021 1:05 AM IST (Updated: 28 Nov 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் ்மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பு செயலாளர் அரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட இணை செயலாளர் விஜயகுமார், கணேசன் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் நியமிக்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் பாரதி பேசினார். ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர்கள் முத்துக்குமார், மணி சங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Next Story