காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 1:12 AM IST (Updated: 28 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ். மகேஷ்வரன், மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி மற்றும் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் சம்பந்தமாக ரோந்து சென்றர்.
அப்போது மகாராஜநகர், 17-வது குறுக்கு தெரு முக்கில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது ஒரு காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த கக்கன் நகர் நடராஜன் மகன் சுரேஷ் (வயது 29), தாழையூத்து அய்யப்பன் மகன் இசக்கிமுத்து (27) மற்றும் தச்சநல்லூர் நல்லகண்ணு மகன் மாரிமுத்து (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story