மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் கைது


மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 1:13 AM IST (Updated: 28 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக காளிமுத்து (வயது51) பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 11 வயதுள்ள சில மாணவிகளிடம் உதடு மற்றும் கன்னத்தை பிடித்து சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திலகராணி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் காளிமுத்துவை கைது செய்தார்.

Next Story