ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு
x
தினத்தந்தி 28 Nov 2021 1:14 AM IST (Updated: 28 Nov 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு

ஸ்ரீரங்கம், நவ, 28-
உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நேற்று முன்தினம் தாயார் சன்னதியிலும், நேற்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் நடைபெற்றது. இன்று பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. இந்த சகஸ்ரதீப கூட்டு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள் நந்து பட்டர், ராகவன் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். சகஸ்ர தீப வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர்.

Next Story