வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு ‘சீல்'


வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு ‘சீல்
x
தினத்தந்தி 28 Nov 2021 1:22 AM IST (Updated: 28 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 14 கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணமான மொத்தம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 945-ஐ செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில், நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 14 கடைகளை பூட்டி ‘சீல்' வைத்தனர்.

Next Story