கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது
அருப்புக்கோட்டையில் நடந்த துணிகர ெகாள்ளையில் கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபிகண்ணன் (வயது 30) உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு இளங்குமரன் (44) தலைமறைவானார். இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ராமநாயக்கன்பட்டி விலக்கு அருகே இளங்குமரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story