மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது + "||" + Man arrested for sexually harassing woman

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது
பணகுடி அருகே பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பணகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை தவறான எண்ணத்துடன் கேலி கிண்டல் செய்துள்ளார். மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால், அவருக்கு மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.
பின்னர் அந்த பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி, சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சங்கு தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து நேற்று செல்வகுமாரை கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயற்சி- காவலாளி கைது
ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. போலி டாக்டர் கைது
போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்
3. 2 பேர் கைது
வத்திராயிருப்பு அருகே வெடிகுண்டு வெடித்த விவாகரம் தொடர்பாக 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
4. தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
5. விராலிமலை அருகே கஞ்சா விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது
விராலிமலை அருகே கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.