சுலோசன முதலியார் பாலத்துக்கு மலர் தூவி மரியாதை
நெல்லையில் 179-வது ஆண்டு விழாவையொட்டி சுலோசன முதலியார் பாலத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோசன முதலியார் பாலத்தின் 179-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். வக்கீல் திருமலையப்பன், கவிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சுலோசன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம், அவரது துணைவியார் கமலம், மகள் கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டு பாலத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். அப்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதில் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி, பைபாஸ் மெடிக்கல் சண்முகவேலன், வக்கீல் கணகசபாபதி, ம.தி.தா.இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மின் விளக்குகளால் பாலம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story