காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவிகள் சண்முகசுந்தரி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story