தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 2:07 AM IST (Updated: 28 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவிடைமருதூர், 
திருவிடைமருதூர் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 
திருமணம்
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் அனிதா நகரை சேர்ந்தவர் பாலாஜி ராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய  மனைவி சாந்தினி (வயது27). இவரது சொந்த ஊர் மதுக்கூர். இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 11 மாத ஆண் குழந்தை உள்ளது. 
தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் கணவர் வீட்டில் சாந்தினி தனது கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். 
இந்தநிலையில் குடும்பத் தகராறில் மனமுடைந்த சாந்தினி வீட்டில் இருந்த சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தினிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story