குற்றாலம் மெயின் அருவிக்கரையில் கலெக்டர் ஆய்வு


குற்றாலம் மெயின் அருவிக்கரையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Nov 2021 2:20 AM IST (Updated: 28 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மெயின் அருவிக்கரையில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆய்வு செய்தார்.

தென்காசி:
குற்றாலம் அருவியை மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

குற்றாலம்

தென் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் குற்றாலம். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வந்தனர். கொரோனா தொற்றினால் சுற்றுலா பயணிகள் குளிக்க அரசு தடை விதித்தது. தற்போது வரை தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் குற்றாலம் மெயின் அருவி கரையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. மேலும் பெண்கள் உடை மாற்றும் அறையின் சுவரும் சேதமடைந்தது. தற்போது குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் நேற்று ஆய்வு செய்தார். சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அவ்வாறு வந்தால் உடனடியாக அறிவிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பல்வேறு இடங்களில் அரசு தளர்த்தியுள்ளது.
இந்தநிலையில் குற்றாலம் அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story