கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது டெல்லி இளம்பெண் பரபரப்பு புகார்
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சினேகல் லோகண்டே மீது டெல்லி இளம்பெண் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். இதுதொடர்பாக அந்த ெபண், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:
இளம்பெண் பரபரப்பு புகார் கடிதம்
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் சினேகல் லோகண்டே. இவர் 2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். தற்போது இவர் கர்நாடக மாநிலம் கலபுரகி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சினேகல் லோகண்டே மீது டெல்லி இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று கூறியுள்ளார்.
இதுெதாடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் அந்த ெபண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் முகநூல் (பேஸ்புக்) மூலம் சினேகல் லோகண்டேவுக்கும், எனக்கும் கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் உண்டானது. பின்னர் நாங்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தோம். அதன்பின்னர் 2 பேரும் காதலிக்க ஆரம்பித்தோம்.
கருத்தடை மாத்திரை கொடுத்தார்
இதற்கிடையே அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சினேகல் லண்டன் சென்றார். அப்போது அவர் டெல்லிக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது நானும், சினேகல்லும் ஒரு ஓட்டலில் 3 நாட்கள் தங்கி இருந்தோம். அப்போது அவர் கருத்தடை மாத்திரைகளை எனக்கு கொடுத்தார். லண்டனுக்கு சென்று வந்த பின்னரும் என்னை டெல்லியில் சந்தித்தார்.
அப்போதும் நாங்கள் நெருக்கமாக இருந்தோம். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், என்னுடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது என்னை மோசடி செய்ய பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
மோடி, அமித்ஷாவுக்கும் கோரிக்கை
மேலும் அந்த இளம்பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தை பதிவு செய்து உள்ளார். மேலும் சினேகல்லுடன் பேசிய வாட்ஸ்-அப் பதிவுகள், சினேகல்லின் புகைப்படத்தையும் அந்த இளம்பெண் டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
அத்துடன் அந்த டுவிட்டரில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி முருகேஷ் நிரானி உள்ளிட்டோரையும் டேக் செய்து தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அந்த இளம்பெண் இன்னொரு டுவிட்டர் பதிவில் தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து கலபுரகி கலெக்டரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் சினேகல், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
போலீசில் புகார் கொடுக்கவில்லை
இதுதொடர்பாக கலபுரகி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் அளித்த பேட்டியில், கலபுரகி மாநகராட்சி கமிஷனர் சினேகல் மீது இதுவரை அந்த பெண் நேரில் வந்து புகார் அளிக்கவில்லை. டெல்லியிலும் புகார் எதுவும் செய்யவில்லை. அந்த பெண் சினேகல் தன்னை டெல்லியில் சந்தித்ததாக கூறியுள்ளார். இதனால் சம்பவம் குறித்து அவர் டெல்லி போலீசில் தான் புகார் அளிக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக சினேகல் என்னிடம் பேசினார். மேலும் அவர் இளம்பெண் மீது போலீசிலும் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது டெல்லி இளம்பெண் புகார் அளித்து இருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானநஷ்ட வழக்கு தொடருவேன்
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சினேகல் லோகண்டே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
எனது மீது புகார் கொடுத்த இளம்பெண் யார் என்றே எனக்கு தெரியாது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் இப்படி செய்து உள்ளனர். எனது பெயரில் யாரோ அந்த இளம்பெண்ணிடம் பேசி உள்ளனர்.
அந்த பெண் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள புகைப்படங்கள், வாட்ஸ்-அப் பதிவுகள் அனைத்தும் போலியானது. இதுகுறித்து கலபுரகி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளேன். என் மீது குற்றச்சாட்டு கூறியுள்ள அந்த பெண் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story