தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Nov 2021 10:37 PM GMT (Updated: 27 Nov 2021 10:37 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பெரியப்பட்டி ஊர், அம்பேத்கர்நகர் தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேல்தளம் சேதமடைந்து சிமெண்டு கற்கள் பெயர்ந்து கீழே விழுகின்றன. கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடம் எந்தநேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். 
-ஊர்மக்கள், பெரியப்பட்டி, சேலம்.
குண்டும், குழியுமான சாலை 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம், பனகமுட்லு கிராமத்தில் இருந்து சொல்லனூர் வரை உள்ள சாலை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலைதான் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பது கூட வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. மேலும் சாலையில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பனகமுட்லு, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டால்மியா ரெயில்வே ஜங்ஷன் வழியாக செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாங்குப்பை, நெரிஞ்சிப்பட்டி ஆகிய பகுதி மக்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், மாங்குப்பை, சேலம்.
ஆபத்தான கிணறு
தர்மபுரி மாவட்டம் நவலை ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் இருந்து அம்மாபேட்டை செல்லும் சாலை ஓரத்தில்ஆபத்தான நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அம்மாபேட்டை, எட்டிப்பட்டி, சாமாண்டஹள்ளி, அண்ணாமலைப்பட்டி, காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் என பலரும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். மழைக்காலம் என்பதால் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர கிணற்றின் மண் சரிவை தடுக்க கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.
சாலையில் நிற்கும் மழை நீர்
தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் ஏ.எஸ்.டி.சி. நகர் அமைந்துள்ளது. இதன் சுற்று வட்டார பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலையில் வடிகால் வசதி முறையாக இல்லாததால் அதிக மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதி சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீர் வடிய சில நாட்கள் ஆகிறது. அத்தகைய நேரங்களில் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலை பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-முனியப்பன், தர்மபுரி.

சரிசெய்யப்பட வேண்டிய பெயர் பலகை 
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் 24 மணி நேர ஆவின் ஜங்ஷன் என்னும் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்கு வெளியே ஆவின் ஜங்ஷன் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜங்ஷன் என்ற வார்த்தையில் கடைசி எழுத்து சேதமடைந்து விட்டது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் இந்த பெயர் பலகையை படித்துப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். எனவே இந்த பெயர் பலகையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், வெண்ணாம்பட்டி, தர்மபுரி.

Next Story