பாலியல் வன்முறை நடந்தால் பெண் குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம் - சென்னை கலெக்டர் அறிவிப்பு
பாலியல் வன்முறை நடந்தால் பெண் குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை,
பாலியல் வன்முறை நடந்தால் தாயிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடமோ தெரியப்படுத்தி அவர்களது உதவியை பெண் குழந்தைகள் நாடுங்கள். அவர்கள் உங்கள் ரகசியத்தை பாதுகாத்து காப்பவராக இருக்கவேண்டும். மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியையோ நாட விரும்பினால் தயக்கம் இன்றி எங்களை தொடர்புகொள்ளலாம். இதற்கென உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் ‘1098’ என்ற எண்ணை தொடர்புகொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும், ஆலோசனையும் வழங்க காத்திருக்கின்றோம்.
‘1098’ என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் உங்களை பற்றிய விவரங்கள் யாரிடமும் பகிரப்படமாட்டாது. நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் 9940631098 என்ற எண்ணில் ‘வாட்ஸ்அப்’ வாயிலாக 'HI' என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது. நாங்களே உங்களை தொடர்புக்கொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம்.
சென்னை மாவட்டத்தில் உங்களுக்காக விரைந்து வந்து உதவி செய்ய நானும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்களும் தயாராக இருக்கிறோம். இந்த தகவலை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு சென்னை மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக உறுதி செய்திடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story