லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
பொன்னேரி அடுத்த ஆலாடு லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்திலேயே வடகிழக்கு பருவமழை மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் மழைநீர் பிச்சாட்டூர் நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பேடு குப்பம், சோமஞ்சேரி ரெட்டிபாளையம் வஞ்சிவாக்கம், ஆண்டார்மடம் கிராமத்தில் சொல்லும் கடப்பாக்கம் நெடுஞ்சாலை உடைப்பு ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பிச்சாட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து 1,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுவதால் ஆரணி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் 3,500 கன அடி தண்ணீர் வெளியேறி ரெட்டிபாளையம், வஞ்சிவாக்கம், தத்தைமஞ்சி, ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரியை சென்றடைகிறது.
Related Tags :
Next Story