மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Nov 2021 4:21 PM IST (Updated: 28 Nov 2021 4:21 PM IST)
t-max-icont-min-icon

மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்நிஷா (வயது 44). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story