வாழையை தாக்கும் முடிக்கொத்து நோய்


வாழையை தாக்கும் முடிக்கொத்து நோய்
x
தினத்தந்தி 28 Nov 2021 5:13 PM IST (Updated: 28 Nov 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

வாழையை தாக்கும் முடிக்கொத்து நோய்

பொங்கலூர்
வாழையில் தற்போது நிலவி வரும் முடிக்கொத்து வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1900 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழையில் முடிக்கொத்து நோய் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் தாக்கப்பட்ட வாழை மரங்களின் இலைகள் சிறுத்தும், மஞ்சள் நிறம் மற்றும் கரும்பச்சை கோடு, புள்ளிகளுடன் அடுக்கடுக்காக இலைகள் வெளிவரும். இந்த வைரஸ் நோய் தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கன்று நடுவதற்கு முன்பாக கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை 40 கிராம் அளவில் எடுத்து களிமண் குழம்பில் கலந்து கிழங்கில் பூச வேண்டும். 
அசுவினி நோயானது வாழை முடிக்கொத்து நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை பரப்புகிறது. இதனை கட்டுப்படுத்த டைமெத்தோபேட் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டின் மேல் இருந்து அடி வரை தெளிக்க வேண்டும். இதனை 21 நாள் இடைவெளியில் 3 தடவை தெளிக்க வேண்டும். மேலும் இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் விவசாயிகள் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story