குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகள் பாதிப்பு


குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 5:24 PM IST (Updated: 28 Nov 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகள் பாதிப்பு

உடுமலை வ.உ.சி. வீதியில் அரசுமருத்துவமனை உள்ளது.  உ.உ.சி.வீதி கச்சேரி வீதி சந்திப்பில் உள்ள பழைய கட்டிட வளாகத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதனால் அங்கிருந்து வரும் புகையால்   நோயாளிகளும், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இதன் அருகில் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு, டாக்டர்களின் ஓய்வு அறை ஆகியவை உள்ளன.எனவே குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தவிர்த்து, அந்த இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Next Story