தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி முத்தம்மாள் காலனி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
தூத்துக்குடியில் பெய்த மழையால் அங்குள்ள முத்தம்மாள் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை விரைந்து வடிய வைக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் தூத்துக்குடி-எட்டயபுரம் மெயின் ரோட்டில் நேற்று காலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் கலைந்து செல்லவில்லை.
அமைச்சர் பேச்சுவார்த்தை
அதன்பிறகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மழைநீரை அகற்றுவதற்கான பணிகளை துரிதப்படுத்துவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து முத்தம்மாள் காலனி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேபோன்று தூத்துக்குடி புறநகர் ஜனநாயக மாதர் சங்கம் சாந்தி நகர் கிளை சார்பில் செயலாளர் மு.செல்வி தலைமையில் வீட்டுக்குள்ளும், சாலையிலும் சூழ்ந்து உள்ள மழைநீரை அகற்றக்கோரி கப்பல் விடும் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பி. பூமயில், புறநகர் செயலாளர் சரசுவதி, பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story