குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற ஆரணி நகராட்சி ஆணையாளர் உத்தரவு


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற ஆரணி நகராட்சி ஆணையாளர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2021 5:36 PM IST (Updated: 28 Nov 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.

ஆரணி

ஆரணியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.

ஆரணி ஆரணிப்பாளையம் கே.சி.கே. நகர் விரிவாக்கப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்ைல. சாலை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.

 சமீபத்தில் பெய்த கனமழையால் கழிவு நீரும், மழை நீரும், கால்வாய் நீரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது. அந்த நீர் வடியாமல் ேதங்கி நிற்பதால் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. 

இன்று அப்பகுதி பொதுமக்கள், புதிய நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். 

கோரிக்கை மனுவை பரிசீலனை ெசய்த புதிய நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி உடனடியாக நகராட்சி பொறியாளர் பிரிவு ஊழியர்களை அனுப்பி வைத்து, அந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை மோட்டார் வைத்து அகற்ற உத்தரவிட்டார்.

Next Story