தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 5:48 PM IST (Updated: 28 Nov 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். 

கீழ்பென்னாத்தூர் தாலுகா தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் சலீம்மாலிக். இவரது மனைவி சம்ஷாத் (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்களான நிலையில் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. 

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்ஷாத் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 

மனவேதனையில் காணப்பட்ட சம்ஷாத் நேற்று  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story