அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு


அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு
x
தினத்தந்தி 28 Nov 2021 6:21 PM IST (Updated: 28 Nov 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

கலவை

கலவையை அடுத்த செல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 65). ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஆஸ்த்மா நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதற்காக வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை நேற்று முன்தினம் சம்பத் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடடியாக அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story