தூத்துக்குடியில் மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்தியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்


தூத்துக்குடியில் மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்தியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
x
தினத்தந்தி 28 Nov 2021 6:26 PM IST (Updated: 28 Nov 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்தியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்தியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் தேங்கிய மழைநீைர பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தொழில் ஆணையரும், தொழில் வணிக இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான சிஜி தாமஸ் வைத்தியன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு
பின்னர் அமைச்சர் கீதாஜீவன், கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்தியன் ஆகியோர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தனர். முழுமையாக மழைநீரை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story