கோவில்பட்டியில் டிசம்பர் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது


கோவில்பட்டியில் டிசம்பர் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது
x
தினத்தந்தி 28 Nov 2021 7:06 PM IST (Updated: 28 Nov 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் டிசம்பர் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது

கோவில்பட்டி:
கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் வருகிற 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சப்-கோர்ட்டு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட முன்சீப் முரளிதரன், நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், ஆறுமுகம், அரசு வக்கீல் சம்பத்குமார், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர்கள் சுஜித், வங்கி மேலாளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகள், வக்கீல்கள் மற்றும் சட்டப் பணிக்குழு உதவியாளர் ஜோன்ஸ் இமானுவேல், சட்ட தன்னார்வலர் மரிக்கொழுந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 
வருகிற டிசம்பர் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம், இதுவரையில் இல்லாத அளவில் சிறப்பாக நடத்துவது என்றும், அன்றைய தினம் கொண்டு வரப்படும், வங்கி வராக்கடன், சிவில், கிரிமினல் வழக்குகள் உள்பட 1,300 வழக்குகள் விவாதத்தில் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் அதிக பட்சமான வழக்குகளை அன்றே முடித்து தீர்வு காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Next Story