தண்ணீர் குடிக்க வந்த புலியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
தண்ணீர் குடிக்க வந்த புலியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி
ஊட்டி அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள், அதிவேக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அணையை ஒட்டி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. படகு சவாரியின் போது சுற்றுலா பயணிகள் அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். சமீபத்தில் மோட்டார் படகில் கேரள சுற்றுலா பயணிகள் அணையில் சவாரி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த புலி நீரில் மூழ்கியபடி சிறிது நேரம் நின்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் காட்டெருமைகள், மான்கள் கூட்டத்தை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் அவர்களை பைக்காரா படகு இல்லம் வெகுவாக கவர்ந்து உள்ளது. எனினும் தொடர் மழையால் அங்கு நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
Related Tags :
Next Story