தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி சுந்தரராமபுரத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 45). இவர் நேற்று ஆண்டாள் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சந்திரா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டாராம். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் சென்று கொண்டு இருந்த பாப்பா என்ற பெண்ணிடம் 1½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டாராம். இது தொடர்பாக பிரட்ரிக் (32) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story