கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து 2,133 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்


கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து 2,133 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 28 Nov 2021 9:43 PM IST (Updated: 28 Nov 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுக்தா அணையில் இருந்து 2,133 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

வடகிழக்கு பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர்மழையால் கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் மணிமுக்தா அணைக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வினாடிக்கு 2 ஆயித்து 133 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணையின் பாதுகாப்பை கருதி 34 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது அணை நீர்மட்டம் 34 அடியை எட்டியதையடுத்து அணையில் இரந்து 2,133 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Next Story