பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மதுரை அரசு சட்டக்கல்லூரி வக்கீல் சிவக்குமார், மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா ஆகியோர் ‘போக்சோ’ சட்டம் குறித்து குழந்தைகள், பெண்களுக்கு பெண் போலீசார் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பெண் போலீசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த புத்தகங்களை பெண் போலீசாருக்கு சூப்பிரண்டு வழங்கினார்.
Related Tags :
Next Story