திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது


திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 10:37 PM IST (Updated: 28 Nov 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது

திண்டிவனம்

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் தாதாபுரம் கூட்டுரோடு சந்திப்பில் ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது அந்தவழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து வந்தவரை போலீசார் மடக்கினர். 

விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் உப்புபாலம் பகுதியை சேர்ந்த பாவாடை மகன் அருள்குமார்(வயது 30) என்பதும், வெள்ளிமேடுப்பேட்டையில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடையில், ஈரோட்டை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து ரூ.60 ஆயிரத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் இவர் மீது புதுச்சேரி, சேலம் பகுதி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடைசியாக செய்யாறு பகுதியில் உள்ள கடையில் திருடிய வழக்கில் கைதாகி பின்னால் ஜாமீனில் வந்த அருள்குமார் தனது கைவரியை காட்டி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story