மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Nov 2021 10:54 PM IST (Updated: 28 Nov 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர், நவ.
வில்லியனூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்தநிலையில் ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் பேட் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பத்துக்கண்ணு- சேதராப்பட்டு   சாலையில்  நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை          எடுக்கப் படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story