கண்மாயில் மூழ்கி வாலிபர் சாவு


கண்மாயில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 Nov 2021 11:08 PM IST (Updated: 28 Nov 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

கண்மாயில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

சிவகங்கை, 
சிவகங்கையை அடுத்த அரசினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது19). இவர் அரசினிப்பட்டியில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றார். தற்போது பெய்த பலத்த மழையினால் கண்மாயில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதுதெரியாமல் சபரிநாதன் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சிவகங்கை தீயணைப்பு படையினர் வந்து தண்ணீரில் மூழ்கி இறந்துபோன சபரிநாதன் உடலை மீட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story