கொத்தனார் மர்மச்சாவு


கொத்தனார் மர்மச்சாவு
x
தினத்தந்தி 28 Nov 2021 11:11 PM IST (Updated: 28 Nov 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கொத்தனார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

காரைக்குடி, 
காரைக்குடி கண்ணதாசன் நகரில் மகாத்மா காந்தி சாலையில் நேற்று சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது  சிறு பாலத்தின் அருகே ஆண் பிணம் கிடப்பதை கண்டனர். உடனே இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் கிடைத்த விசிட்டிங் கார்டில் உள்ள தேவகோட்டை போர் வெல் கம்பெனியின் முகவரியில் தொடர்புகொண்டு விசாரித்தனர்.இதில் இறந்து கிடந்தவர் காளையார்கோவில் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலுச்சாமி (வயது47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story