முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி முன்னாள் கவுன்சிலர் வசீம் அக்ரம் (வயது 42) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் 21 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மற்றும் சேலம் சிறையில் அடைத்துள்ளனர். இதில் முக்கிய நபரான டீல் இம்தியாஸ் உள்பட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் மணி என்கிற மணிகண்டன் (27) மற்றும் சென்னை வண்டலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சமா என்கிற முனீஸ்வரன் (23), பிரவீன்குமார் (23) ஆகிய 3 பேரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story