வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Nov 2021 12:13 AM IST (Updated: 29 Nov 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது திருச்சி ஐ.ஜி. உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தோகைமலை, 
தோகைமலை அருகே ஆர்.டி.மலை ஊராட்சி தம்பம்பட்டி காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ரமேஷை, ஆறுமுகம் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில், அதிருப்தி அடைந்த ரமேஷ், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தோகைமலை போலீசார் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story