வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பீரோ உடைப்பு
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வளர்மதி. இவர் பஸ் நிலையம் எதிரே இனிப்பகம் நடத்தி வருகிறார்.
இவர் காரைக்காலில் உள்ள தனது இளைய மகளை பார்ப்பதற்காக இவர், கடந்த வாரம் சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த ேபாது இரண்டு பீரோக்களில் ஒன்று உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை கொள்ளை
பீரோவில் இருந்த 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வளர்மதி அளித்த தகவலின் பேரில் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story