மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான தொழில்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலாக விவசாயமே உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தி செய்யும் செங்கல் சூளைகள் உள்ளன. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தி செய்யும் சூளைகள் உள்ளன.
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
செங்கல் சூளை
இந்த செங்கல் சூளையை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் செங்கல் சூளைக்கு தேவைப்படும் செம்மண், எரிபொருளாக பயன்படுத்தப்படும் விறகு ஆகியவற்றை வழங்குதல், செங்கற்களை பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக இறக்குதல் உள்ளிட்ட பணிகளிலும் எண்ணற்ற தொழிலாளர்கள், மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
உற்பத்தி பாதிப்பு
இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்த மழையால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story