பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர் பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். அதில் செல்போன், ரூ.1200 ஆகியவை இருந்தது.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story