ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 Nov 2021 1:36 AM IST (Updated: 29 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 12-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 190 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 341 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 13,195 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 20,116 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலை திருவள்ளுவர் தெரு பகுதி அங்கன்வாடி மையம், முத்துநகர் (கிழக்கு) அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனோ தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

Next Story