மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சேலத்தில் முகாம்
நகைகள் கொள்ளை வழக்கில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
தனிப்படை போலீசார் விசாரணை
பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்த நகைக்கடை அதிபர் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவரது வீட்டில் இருந்த 103¼ பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் காரை, முகமூடி அணிந்து வந்த 3 மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் மர்மநபர்களில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் சென்ற கார் சேலம் மாவட்டம் வாழப்பாடியை தாண்டி சென்றதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
சல்லடை போட்டு தேடுகின்றனர்
அதன்பேரில் தனிப்படை போலீசார் தற்போது சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு, மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று, சல்லடை போட்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story