மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 1:39 AM IST (Updated: 29 Nov 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பூலாம்பாடி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூலாம்பாடி ஏரிக்கரையில் மது விற்ற பூலாம்பாடியை சேர்ந்த செல்வம்(வயது51), சின்னத்துரை(45) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story