நள்ளிரவில் அனுமதியின்றி சிறப்பு காட்சி; தியேட்டர் மேலாளர் மீது வழக்கு
நள்ளிரவில் அனுமதியின்றி சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் அறிந்து தியேட்டர் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாநகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு சினிமா தியேட்டர் முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அந்த தியேட்டரில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட உள்ளதாக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தியேட்டர் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story