பஞ்சாயத்து தலைவியின் கணவர் கிணற்றில் மூழ்கி சாவு
வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவியின் கணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவியின் கணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.
குளிக்க சென்றார்
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் பனி மதுர பிரைட்டன் (வயது 44). இவர் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பிரமிளா. இவர் தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் பனி மதுர பிரைட்டன் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தனது பம்ப் செட் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பம்ப்செட் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு அவரது துணிகள் மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
கிணற்றில் மூழ்கி சாவு
அப்போது அருகில் உள்ள தோட்டக்காரர்கள் பனி மதுர பிரைட்டன் கிணற்றில்தான் குளித்து கொண்டிருந்தார் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் மூழ்கி தேடி பார்த்தனர்.
சிறிது நேரத்தில் கிணற்றுக்குள் இருந்து பனி மதுர பிரைட்டன் உடலை பிணமாக மீட்டனர். அவரது உடலை வள்ளியூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story