சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவு; தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல் வைப்பு


சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவு; தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 2:11 AM IST (Updated: 29 Nov 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

நாங்குநேரி:
நெல்லை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

தொழிலாளி

நெல்லை அருகே மூன்றடைப்பை அடுத்த கோவைகுளத்தைச் சேர்ந்தவர் பேச்சி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 24). கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவரை மருதகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாரிமுத்துவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாவு

இதற்கிடையே தனது மகனுக்கு மருதகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக, மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் பேச்சி புகார் செய்தார். அதன்பேரில், அந்த ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ டாக்டராக பணியாற்றிய சக்தி, அவருடைய நண்பரும் நெல்லை சித்த மருத்துவ கல்லூரி 2-ம் ஆண்டு மாணவருமான தேனியைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

‘சீல்’ வைப்பு

தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த டாக்டர் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி மாரிமுத்து உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இந்நிலையில் தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குனர் வெங்கட்ரெங்கன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி மருதகுளத்தில் இயங்கி வந்த அந்த தனியார் ஆஸ்பத்திரியை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அதிகாரிகள் மாரிமுத்துவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story