நெல்லையப்பர் கோவிலை டிரோன் மூலம் படம் பிடித்த கேரள வாலிபர்கள்- போலீசார் எச்சரித்து அனுப்பினர்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை கேரள வாலிபர்கள் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை கேரள வாலிபர்கள் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிரோன் கேமரா பறந்தது
நெல்லை டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் மேலே டிரோன் கேமரா பறந்துள்ளது.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து நெல்லை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 3 பேர் டிரோன் கேமராவை பறக்க விட்டது தெரியவந்தது.
கேரள வாலிபர்கள்
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், கோவிலின் அழகை படம் பிடித்து சினிமாவில் சேர்க்க இருப்பதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் 3 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story