போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்; அண்ணன்- தம்பி கைது
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பராக்கிரம பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை ஒரு கார் இடித்து விட்டு நிற்காமல் செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே பராக்கிரம பாண்டியன் அந்த காரை பின்தொடர்ந்து சென்றார். அந்த கார், மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றுகொண்டிருந்தது.
அங்கு சென்ற பராக்கிரம பாண்டியன் காரில் இருந்த கீழப்புலியூர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 35), அவரது தம்பி கண்ணன் (34) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில் தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story