கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 4 பேர் சாவு


கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 29 Nov 2021 2:42 AM IST (Updated: 29 Nov 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புரா அருகே கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

விஜயாப்புரா:
  
4 பேர் சாவு

  விஜயாப்புரா அருகே உப்பள்ளி-விஜயாப்புரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு மராட்டியம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும், உப்பள்ளியில் இருந்து நரகுந்து நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

  இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியதுடன், கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

எம்.எல்.ஏ. உறவினர்

  இந்த விபத்து பற்றி அறிந்ததும் விஜயாப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்களில் ஒருவர் நாகதானா தொகுதி எம்.எல்.ஏ. தேவானந்தா சவுகானின் உறவினர் விஜயக்குமார் காசிநாத தொட்டமணி என்பது தெரியவந்தது. மற்ற 3 பேரின் விவரங்கள் தெரியவில்லை.

  இவர்கள் 4 பேரும் மராட்டியத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

  இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story