வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்வு


வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 29 Nov 2021 2:01 PM IST (Updated: 29 Nov 2021 2:01 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
வெம்பக்கோட்ைட அணை 
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இரண்டு பாசன மதகுகள் உள்ளன. 
இடது பாசன கால்வாய் மூலம் வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், சல்வார்பட்டி, சங்கரநத்தம், படந்தால் ஆகிய கிராமங்களும் வலது கால்வாய் மூலம் பனையடிபட்டி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கோட்டப்பச்சேரி, மேட்டுப்பட்டி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர். 
விவசாயிகள் மகிழ்ச்சி 
வெம்பக்கோட்டை அணையின் நீரை நம்பி வல்லம் பட்டி கண்மாயை சேர்ந்த 500 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. சாத்தூர் அருகே உள்ள நென்மேனி 400 ஏக்கர் பாசன பரப்புள்ள கண்மாயும் உள்ளது. சிவகாசி நகராட்சியை சேர்ந்த மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. 
50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. 
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது 13 அடி நீர்மட்டம் ஆக உள்ளது.  
இன்னும் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பிருப்பதால் விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 
ஏற்கனவே வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் விவசாய பணி தொடங்கி இருப்பதால் கண்மாய்களிலும் போதிய தண்ணீர் இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
தற்போது அணையிலும் தண்ணீர் இருப்பதால் நெல் விளைச்சல் முழுமையாக நடைபெறும் என்று விவசாயிகள் கூறினர்.

Related Tags :
Next Story