சாலையோர வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை சான்று பெற வேண்டும் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தல்
சாலையோர உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற வேண்டும் என்று மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
சாலையோர உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற வேண்டும் என்று மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு முகாம்
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, பாஸ்ட் புட், கூழ் வண்டி, சில்லி சிக்கன், சிப்ஸ், பழங்கள் உள்ளிட்ட நடமாடும் உணவு வணிகர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை தாங்கினார். இதில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி, நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளை சேர்ந்த நடமாடும் உணவு வணிகர்கள் பங்கேற்றனர்.
முகாமில் உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற பயிற்றுனர் திவ்யா பாஸ்கரன் பங்கேற்று பயிற்சி அளித்தார். தொடர்ந்து நடமாடும் உணவு வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் நடைமுறைகள் தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் பரிமாறுதல், பூச்சிகள் கட்டுபாடு, குடிநீர் தன்மை உள்ளிட்ட விவரங்களை அவர் தெளிவாக விளக்கி கூறினார்.
சான்றிதழ்
இந்த முகாமில் மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உணவு வணிகர்கள் உணவு பொருட்களை சுத்தமாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும். சாலையோர வணிகர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெறவேண்டும். உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சாலையோர உணவு வணிகர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
இந்த முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி மற்றும் நடமாடும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கிருஷ்ணன், வேல், பழனி, இஸ்மாயில், வடிவேல், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story