கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் மழை வெள்ளத்தில் முதலை நடமாட்டமா? அதிகாரி விளக்கம்


கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் மழை வெள்ளத்தில் முதலை நடமாட்டமா? அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2021 6:15 PM IST (Updated: 29 Nov 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ காட்சியில் வருவது முதலை அல்ல. காய்ந்து போன மரக்கட்டை ஆகும். எனவே கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி அருகே உள்ள வல்லாஞ்சேரி ஏரி நிரம்பி உபரிநீர் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை வழியாக நேற்று முன்தினம் முதல் வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை வல்லாஞ்சேரி கூட்ரோடு அருகே ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக மழை வெள்ளம் வெளியேறும் போது அதில் 3 அடி நீளமுள்ள முதலை ஒன்று தண்ணீரில் நீந்திச் செல்வது போல வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக காட்டுத்தீ போல் பரவி கொண்டிருந்தது.

இதனால் வல்லாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ குறித்து செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது:-

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ காட்சியில் வருவது முதலை அல்ல. காய்ந்து போன மரக்கட்டை ஆகும். எனவே கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story