காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 29 Nov 2021 6:20 PM IST (Updated: 29 Nov 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

கனமழை

காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, பாலுச்செட்டிச்சத்திரம், தாமல், மாகரல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் பஸ் நிலையம், மேட்டு தெரு, ரங்கசாமி குளம், செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மின்நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைவெள்ளம் தேங்கியுள்ளது. தேங்கிய வெள்ளம் வடியாததால் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

தேங்கிய வெள்ளம்

மழைநீர் ஆங்காங்கே தேங்கி காஞ்சீபுரமே வெள்ள காடாக காட்சியளித்து வருகிறது. மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெங்கச்சேரி கிராமம், செய்யாற்றில் சேதமடைந்துள்ள தரைபாலத்தை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதேபோல் பல்லவன் நகர், வ.உ.சி தெரு, ஜெம் நகர், ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் சிரமமடைந்து வருகின்றனர்.


Next Story